காங்கிரயை விட எல்லாவகையிலும் நாங்கள் சிறந்தவர்கள் என்று தெரிவித்திருக்கிறார் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆனிராஜா. இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் கடந்த 45 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவரை தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் போட்டியாளராக நிறுத்தியிருப்பது அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகித்தாலும் கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணியின்றி தனித்தே அரசியலில் களம் காண்கின்றன. அந்த மாநிலத்தில் மார்ச்சிஸ்ட் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றுக்கு இடையே தான் நேரடிப்போட்டி உள்ளது. பா.ஜ.கவும் தனி அணி அமைத்து தேர்தல்களம் காண்கிறது.
இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்து கொண்டு கேரளாவில் தனித்து போட்டியிட்டு ராகுல் காந்திக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது. நீங்கள் உள்ளூர்காரர் ராகுல் காந்தி வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்ல வருகிறீர்களா? என்று ஆனி ராஜாவிடம் கேட்டபோது. அப்படி எல்லாம் நான் சொல்லவில்லை இந்தியாவில் எந்தத் தொகுதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நான் வயநாட்டைச் சேர்ந்தவள். எனது சகோதர, சகோதரிகள் கேரளத்தில் தான் உள்ளனர். வயநாடு எனக்குப் புதிய இடமல்ல. கேரள மாநிலத்தில் மகளிர் அணியின் மாநில உதவிச் செயலாளராகப் பணியாற்றும் போது கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு நான் பொறுப்பாளராக இருந்தேன். ஆகவே வயநாடு எனக்கு வீடு மாதிரி என்று தெரிவித்திருக்கிறார்.
ராகுல் காந்தி மீண்டும் வயநாட்டிலேயே போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்தியா கூட்டணியில் பல குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், இது போன்ற அரசியல் நகர்வுகளால் இந்தியா கூட்டணி பலம் இழக்கிறதா என்ற என்றும் கூட்டணிக் கட்சியினர் பார்க்கத் தொடங்கியுள்ளனார்
மக்களவைத் தேர்தலில் போட்டியிட குடும்ப அரசியல்வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநிலங்களவை எம்.பி.யாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய முற்படுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி சோனியா காந்தியை மறைமுகமாக தாக்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி அண்மையில் தேர்வான நிலையில் பிரதமர் இந்த விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் பிரதமர் பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசும்போது குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள், ஊழல் கட்சிகள் எல்லாம் ஒன்றுகூடி தேர்தலில் நின்று மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள், என்று இந்தியா கூட்டணியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அண்மையில் மேற்கு வங்கத்தில் பொதுக் கூட்டத்தில் பேசும்போது அடக்குமுறை, வாரிசு அரசியல் நம்பிக்கைத் துரோகம், ஆகியவற்றின் அர்த்தமாக திரிணாமுல் காங்கிரஸ் மாறியுள்ளது. அரசுத் திட்டங்களை ஊழலாக மாற்றுவதில் அக்கட்சி நிபுணத்துவம் பெற்றுவிட்டது. மேற்குவங்க அரசு செயல்படும் விதத்தால் மாநில மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுடன் அக்கட்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரம் வழங்கினர். ஆனால் ஊழல் மற்றும் பாரபட்சத்துக்கே திரிணமுல் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. வளர்ச்சியைப் புறக்கணித்து விட்டது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியால் மேற்கு வங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் நேரத்தில் இந்தியா கூட்டணி நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டிலும் தொகுதிப் பங்கீடு பிரச்சினையால் இந்தியா கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வை விட்டுஅதிக தொகுதிகளைத் தரத் தயாராக இருக்கும் அ.தி.முக பக்கம் போகலாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கோரிக்கை எழுப்புவதாகத் தெரிகிறது. ஏனென்றால் தி.மு.க.விடம் அதிகத் தொகுதிகளைக் கேட்கும் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க இன்னு பதில் தராமல் இருப்பதும் கூட்டணி பிரச்சினை இழுபறியில் இருப்பதும் காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துவிடுமோ என்ற பரபரப்பும் இங்கே நிலவுகிறது. ஆனால் உயர்மட்டத்தில் ராகுல் காந்தியும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் நெருக்கமான நட்போடு இருப்பதால் தமிழ்நாட்டில் கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்பு இல்லை. என்றே தெரிகிறது.
பிராமர் நரேந்திர மோடி, இந்தியா கூட்டணி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும். கடந்த பந்தாண்டுகளாக இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பா.ஜக. தலைமையிலான அரசு கொடுத்து வாங்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் தனது எக்ஸ் தளத்தில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வில்லை. அந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் உற்பத்தி துறையை மேம்படுத்த செலவிடவில்லை.
(தொடரும்)