49
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் படத்துக்கு ‘வளையம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்குகிறார். ஹீரோவாக தேவ் அறிமுகமாகிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்கிறார். சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பெரேடி, சுரேஷ் மேனன் ஆகியோருடன் மேலும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மகேந்திர எம். ஹென்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு மைக்கேல் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார்.
த்ரில்லர் படமான இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.