ஓநாய் ஒன்று பசிக்கு உணவு தேடி அலைந்து கொண்டிருக்கும்போது, ஒரு முயலை பிடித்து, ‘முயலே, உன்னைக் கொன்று திண்ணப் போகிறேன்’ என்றது. பீதியடைந்த முயல், நடு நடுங்கி என் மீது கருணை காட்டு, என் குழந்தைகள் எனக்காகக் காத்திருக்கும். என்னை விட்டு விடு’ என்று கெஞ்சியது.
ஓநாய், கிடைத்த இறையை விட்டு விடுமா? ‘எனக்கு மூன்று நாள் தவணை கொடு’ என்றது முயல். ‘சரி’ என்று சம்மதித்து விட்டது ஓநாய்.
ஒரு நாள், இரண்டுநாள், மூன்றுநாள் – தவணை முடிந்தது. ‘முயலே, நீ கேட்ட தவணை முடிந்தது’ என்றது. முயல் பரிதாபமாகக் கத்தத் தொடங்கியது. ‘ஏன் ஓலமிடுகிறாய்?’ என்றது ஓநாய்.
‘ஓநாயே, எதற்காக தவணை கொடுத்தாய்? என்னைக் கண்ட அன்றே கொன்றிருக்க வேண்டும். அடுத்த மூன்று நாள், நான் பட்ட வேதனை என்னைக் கொல்லாமல் கொன்று விட்டது’ என்றது முயல்.
சாரணா கையூம்