62
விஞ்ஞானப் பேருண்மைகளுள் ஒன்றான பரிணாம வாதம் என்பதைக் கண்டவர் டார்வின். ஒரு நாள், குறும்புக்காரச் சிறுவன் ஒருவன், ஒரு பூச்சியின் உடலை வெட்டி அதன் தலையை டார்வினிடம் காட்டி, ‘இது என்ன பூச்சி’ தாத்தா என்று கேட்டான்.
டார்வின் அதைப் பார்த்து விட்டு, பிடிக்கும் போது இது ‘ஹம்’ என்று கத்தியதா? என்று கேட்டார்.
சிறுவன், மகிழ்ச்சியோடு ‘ஆம்’ என்றான்.
உடனே, டார்வின் அப்படியானால் இது ‘ஹம்பக்’ பூச்சி என்றார்.
இதைக் கேட்டதும் சிறுவன் டார்வினை ஏமாற்றி விட்டதாகக் குதூகலித்தான்.
‘ஹம் பக்’ (Humbug) என்றால், பாசாங்கு ஏமாற்று என்று பொருள்படும்