நடிகை நயன்தாரா சமூக வலைதளத்தில் ஒரே நாளில் இரண்டு விதமான வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் அவை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ’டெஸ்ட்’ மற்றும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில் அவை இணையத்தில் வைரலாகும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் காரில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் செல்லும் வீடியோ ஒன்றை நயன்தாரா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ஒரு குழந்தையை கணவர் விக்னேஷ் சிவன் தோளோடு வைத்திருக்கும் காட்சியும், இன்னொரு குழந்தையை நயன்தாரா தனது மார்போடு அணைத்து நெற்றியில் முத்தமிடும் காட்சிகள் வீடியோவில் உள்ளன.
இதனை அடுத்து இன்னொரு வீடியோவில் நயன்தாரா தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த இந்த இரண்டு வீடியோக்களும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில் அவை இரண்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.