ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் இதுவரை திரையில் தோன்றாத பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். “இது கஜினி போன்ற பரபரப்பான ஆக்ஷன் படம். காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். நான் எழுதிய இயல்பான கதாநாயகி பாத்திரத்துக்கு ருக்மணி வசந்த் பொருத்தமாக இருந்தார். அவர் நடித்த கன்னட படங்களைப் பார்த்து அவரை தேர்வு செய்தோம். இந்தப் படத்தின் உடல் மொழிக்காக சிவகார்த்திகேயன் சிறப்புப் பயிற்சிப் பெற இருக்கிறார்” என்றார்.
ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக சிவகார்த்திகேயன் பயிற்சி
40