72
வள்ளியம்மைப் பாட்டி
வடைசுட்டு விற்பாள்
பாட்டி சுட்ட வடையை
தினம் ருசித்துத் தின்னும் காகம்!
பாட்டி தந்த வடையொன்றை
தின்னச் சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது!
காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரொம்ப நாளாச்சே!
என்றே நரியும் சொன்னதால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக் காலில் வைத்துக் கொண்டே
கா… கா… வென்றே பாடியது!
ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம்!