ஒரு மன்னன் முரசறிவித்தான்.
தான் காணாத பழத்தை எவன் கொண்டு வருகிறானோ அவனுக்கு, தன் இராஜ்யத்தில் பாதி தருவதாக மன்னர் ஒருவர் முரசறிவித்துள்ளான். அத்தோடு மன்னன் அறியாத பழத்தைக் கொண்டு வந்தால், கொண்டு வந்தவன் வாயிலேயே அப்பழத்தைத் திணிப்பதாகவும் கூறினான்.
அதைகேட்ட அனைவரும் ஒவ்வொருவராக வாழைப்பழம். மாம்பழம், அன்னாசி பழங்கள் என கொண்டு வந்தனர்.
இதன் போது மன்னன், அன்னாசி பழத்தைக் கொண்டு வந்தவனின் வாயில் திணிக்கும் போது, இரத்தம் வந்துவிட்டது. அதையும் பொருட்படுத்தாமல் அவன் சிரித்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட மன்னன், ‘இரத்தம் வடிகிறதே ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டான்.
மன்னவா! வெளியில் ஒருவன் பலாப்பழத்தோடு நிற்கிறான். அவன் படப் போகும் துன்பத்தை எண்ணிப் பார்தேன், சிரிப்பு வந்து விட்டது என்றான். நாம் பிறரின் துன்பத்தில் இன்பமடைவது நன்மையான விடயமல்ல பிள்ளைகளே.
சாரணா கையூம்