90
நடிகர் சூர்யா ‘கங்குவா’ படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். அதற்கு பின், மகாபாரத கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் ‘கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கிறார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இதில் திரவுபதியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான லுக் டெஸ்ட் 2 முறை நடந்து முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ராம்சரண் ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார்.