48
நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படத்துக்கு ‘நிலா வரும் வேளை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனா கதாநாயகனாக நடிக்கிறார். மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஸ்ருதி நல்லப்பா தயாரிக்கிறார். ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தை இயக்கிய ஹரி இதை இயக்குகிறார்.இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாலக்காட்டில் தொடங்கியது.