தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தசை அழற்சி நோய்க்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்காக நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் ‘சிட்டாடல்’ வெப் தொடருக்கான டப்பிங்கை முடித்த அவர், நடிப்புக்குத் திரும்ப இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ‘உப்பென்னா’ புச்சிபாபு இயக்கும் படத்தில் ராம் சரண் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் நடிப்புக்குத் திரும்புவதை சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார். இதுபற்றிஅவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நடிப்புக்கு மீண்டும் திரும்புகிறேன். இடைப்பட்ட காலத்தில் வேலையில்லாமல்தான் இருந்தேன்.
ஆனால், என் நண்பருடன் உடல் ஆரோக்கியம் குறித்து உருவாக்கியுள்ள ‘போட்காஸ்ட்’ ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுகிறேன். உங்களில் சிலருக்கு அது பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.