உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் டெக் நிறுவனம் சார்பில் அருணாச்சலம் அனந்தராமன் தயாரிக்கும் இந்தப் படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கிறார்.
இதில், ‘மைம்’ கோபி, வையாபுரி, ப்ளாக் பாண்டி, ‘ஜெயிலர்’ தன்ராஜ், ஷெர்லி பபித்ரா, கனிமொழி உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜசேகர பாண்டியன் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். செம்பூர் கே.ஜெயராஜ், ராஜசேகர பாண்டியன் வசனம் எழுதியுள்ளனர். கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி இருக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகச் சொல்லும் இந்தப் படத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும் இடம் பெறும் என்கிறது படக்குழு தெரிவித்துள்ளது.