Exocoetidae என்ற விலங்கியல் பெயரை கொண்ட மீன்களின் முன்துடுப்புகள் மீக நீண்டதாக பறவைகளின் இறக்கைகள் போல இருப்பதால் இவை, எளிதாக காற்றில் படபடத்து தாவுகின்றன.
இம்மீன்கள், கடல் அமைதியாக இருக்கும்போது கடலின் மேல்மட்டத்துக்கு வருவதில்லை; மாறாக கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் போது தண்ணீருக்கு வெளியில் வந்து குதித்து, காற்றில் சில அடி தூரம் வரை பறந்து சென்று விளையாடுகின்றன. இந்த மீன்கள் பறக்கும் மீன்கள் என்று பெயர் பெற்றது இப்படித்தான். அதிக பட்சமாக 6 மீற்றர் உயரத்துக்குத் தாவுவதும் சுமார் 50 வினாடிகளில் 70 கி.மீற்றர் வேகத்துக்கு பறப்பதும் இவற்றின் சிறப்பு. வேகமாக பறக்கும் போது இவை 160அடி தூரம் வரை பறப்பதாக தெரிய வந்துள்ளது.
கடலில் மிதக்கும் தாவர மிதவை நுண்ணுயிரிகள் தான் இதன் உணவாகும். பறக்கும் மீன்களைக் கடல் பறவைகளும் ெடால்பின்கள் மற்றும் சில வகை மீன் வகைகளும் விரும்பிச் சாப்பிடுகின்றன. மீன்பிடிப்போர் ேடார்ச் லைட்டுகளை இருட்டில் கடலின் மேற்பரப்பில் அடித்து இதைக் கவர்ந்து பிடிக்கின்றனர். இந்த மீன்கள் சுவை நிறைந்த உணவாகவும் இருப்பதால் இவற்றைப் பிடிப்பதில் பல காலமாகவே உலக நாடுகளிடையே போட்டிகள் நிலவுகின்றன. பார்படோஸ் நாட்டின் தேசிய சின்னமாகவும், தேசிய மீனாகவும் திகழும் இந்த பறக்கும் மீன்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.