“சைவத் தமிழ் மன்றத்தின்” அகில இலங்கை சைவ பண்டிதர் சபை கடந்த 03ஆம் திகதியன்று நடத்திய 2023ஆம் ஆண்டுக்கான இளம் சைவ பண்டிதர்கள் மற்றும் சைவ பண்டிதர்களுக்கான பரீட்சைகளின் போது சித்தியடைந்தவர்களுக்கான “பட்டமளிப்பு விழா” மட்டக்களப்பு பிள்ளையாரடி தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சைவத் தமிழ் மன்றத்தின் தலைவர், சைவப் புலவர், சைவ பண்டிதர் பேராசிரியர் தி. சதானந்தன் தலைமை வகித்திருந்ததுடன் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா, கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி வ. குணபாலசிங்கம் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் வருகை தந்திருந்தார். இந்நிகழ்வில் ஒரு சைவப் பண்டிதரும், பதினாறு இளம் சைவ பண்டிதர்களும் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான பட்டத்தை சைவத் தமிழ் மன்றத்தின் போசகர் சைவப்புலவர், சைவ பண்டிதர் கலாநிதி சா.தில்லைநாதன் வழங்கினார்.
சைவ பண்டிதர் பட்டத்தை மட்டக்களப்பு மகிழூர்முனையை சேர்ந்த செல்வி. சிவானந்தராசா அபிஷனா பெற்றுக் கொண்டதுடன் இளம் சைவ பண்டிதருக்கான பட்டத்தை கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கண்ணகி கலாலயத்தின் தலைவர் A.K.இளங்கோவின் தாயார் சாந்தி ஆனந்தகிருஷ்ணனும், ஏனைய பிரதேசங்களாகிய (முத்துக்கல்) கி.விதுர்சனா, (வீரமுனை) சு.
பவேர்த்தனா, மற்றும் தி.மதுஷானி (புதுக்குடியிருப்பு) கி.தயனி மற்றும் சா.பிரியங்கா (கோமாரி) தே.
தனுஜா, (ஆயித்தியமலை) ர.
ரஜித்தா, (பேசாலை) மா.நாகரூபிணி, (கிளிநொச்சி) பா.டினோஜா, (ஹட்டன்) ஐ.கோகிலவாணி, (நாவற்குடா) ப.ஜனார்த்தனி, (தெனியாய) மு.கிருஷ்ணகுமார், (பதுளை) தே.ஜனனி, (வவுனியா), ஜெ.விஜயரூபா, (நாவிதன்வெளி) சிவஸ்ரீ கு.சுபாஸ்கர் ஆகியோர் இவ்வாண்டுக்கான இளம் சைவ பண்டிதர்களாக பட்டங்களை பெற்றுக்கொண்டு சத்தியபிரமாணமும் செய்து கொண்டனர். சிவஸ்ரீ ந. முரசொலிமாறன் குருக்கள், மன்றத்தின் பொதுச் செயலாளர் சைவப் புலவர் சைவ பண்டிதர் செ. சாந்தரூபன், உபதலைவர் சைவப் புலவர் சைவ பண்டிதர் சோபா ஜெயரஞ்சித், சைவப் புலவர் சைவ பண்டிதர் சிவஸ்ரீ யோ. கஜேந்திரா தேர்வுச் செயலாளர் சைவப் புலவர் சைவ பண்டிதர் சிவஸ்ரீ தெ. தயமுகன் உள்ளீட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். இதன் போது கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன