வரலாற்றுச் சிறப்பும் புராதன தொன்மையும் வாய்ந்த மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமகோற்சவம் பெப். 2ம் திகதி அன்று ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ கிரியாபானு சு.கிருஸ்ணகுமார் குருக்களினால் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பகல், இரவு திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மாசி மாதம் 12ம் நாள் (24.02.2024) சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் பஞ்சரதபவனியும், மாசி மாதம் 14ஆம் நாள் (26.02.2024) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும் அன்றிரவு துவஜஅவரோகணமும் (கொடியிறக்கம்) நடைபெற திருவருள் பாலித்துள்ளது.
ஆலய பரிபாலன சபை தலைவர் விக்கினேஸ்வரர் சர்வானந்தா, செயலாளர் செல்லையா ஜெயராஜ், பொருளாளர் பெரியசாமி மனோகரன், ஆகியோரின் வழிநடத்துதலின் கீழ் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் தேர்த்திருவிழாவின் சகல ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர். இந்த சகல புனித நிகழ்வுகளிலும் அம்பிகையடியார்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து அம்பிகையின் அருட்கடாட்சத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.