93
கொழும்பு – தெஹிவளை, ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று தைத்திங்கள் 28 ஆம் நாள் (11.02.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 முதல் 11.02 மணிவரை ” சிவன்” நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் (குட முழுக்கு) நடைபெறும். நேற்று தைத்திங்கள் 27 ஆம் நாள் (10.02.2024) சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து எண்ணெய் காப்பு (தைலஸ்நானம்) சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமியின் திருவருளும் மத் சந்திரசேகர சுவாமிஜியின் குருவருளும் கைகூடியுள்ளதால் அடியார்கள் அனைவரும் சிவனின் கும்பாபிஷேகத்தை தரிசித்து உய்வடைய வேண்டுகிறோம்.