67
முரண்பாடுகளை
உடைத்துக் கொண்டெழும்
மொழியின் அழகியலை
எப்போதாவது
ரசித்ததுண்டா நீங்கள்
ஒரு முகமனோடு
தகவமைக்கும்
அதன் புலமை
முயற்சிகள்
விசாலத்
தளமொன்றில்
நலம் கேட்டு மலரும்
அனிச்சைகளாக
அணுகுமுறைகள்
செழிக்கப்
பிசைந்தெழும்
அந்தக்
குஞ்சுக்குரல் ஈன்ற
உச்சரிப்புச் சொற்களில்
மயங்காத
மனமுண்டோ சொல்!
ஏதுமறியாப்
பாவனையோடு
அடங்கும்
அதன் பிடிவாதங்கள்
முற்றாகத்
தின்னட்டுமென
தேர்ந்தெடுக்கின்றன
விட்டுக்கொடுப்புக்களை
அடிமைகளாக்கியபடி .
முஜாமலா நிந்தவூர்