Home » முழுமதியை உன் முகத்தில் கண்டேன்…!

முழுமதியை உன் முகத்தில் கண்டேன்…!

by Damith Pushpika
February 11, 2024 6:33 am 0 comment

நிம்மதியை
தொலைத்து நின்றேன்…!
பூவைப்போல
பெண்ணே
சிரிக்கின்றாய்…!
எம் புத்தியை
சிறையெடுக்கின்றாய்…!

மனசாந்தியை
சத்தமின்றி
சிதைக்கின்றாய்…!
மகராசி உன்னழகை
கண்டே பிரம்மனையும்
துதிக்கின்றேன்…!

உன்னைப் போல
பேரழகியை
உலகில்
காணவில்லையடி…!

உனக்கு நிகர் நீயடி
என் துயருக்கு
விடையாய்
வாய்த்தாயடி…!

உன்னதமே
உன்னதமே உறவாகிட
தருவாயா சம்மதமே…!

உம் அழகினைக்
கண்டு வியந்தேன்
மீண்டு எங்கும்
எழுந்தேன்…!

விடிவெள்ளியே
போகாதே திசைமாறி
எம்மனசை வாட்டாதே
கருத்துமீறி…!
உம்அறிமுகமே
ஆண்டவன் கொடுத்த
அதிசய வரமடி…!
அன்பே உன்னை
உறவாக்கிட துடிக்குதே
எனது கரமடி…!
ஈவு இரக்கம் நிறைந்தவளே
ஈகையில் என்றும்
சிறந்தவளே…!

பாவியை
கொஞ்சம் பாரடி
என் பாசத்தை ஏற்கும்
நாளினை கூறடி…!
மௌனம் காத்தே
தொலைக்காதே
என் மனசை
வாட்டி வதைக்காதே…!

அலைகடலில் துரும்பாய்
இன்றோ நானடி…!
உம்அன்பு கிடைத்தால்
உலகையே
வெல்வேண் பாரடி…!
ஆகச் சிறந்த அழகி
நீ மட்டும் தானடி…!

அலைகழிப்பினை
செய்யாதே
நீ எம்உயிருக்கு மேலடி…!
மறுதாய்மடியாய்
உன்னையே
பார்க்கிறேன் நானடி…!
மனதை மூடி
மறைத்தால் என்ன
செய்வேன் கூறடி…!

வி.கணேஷ் பாபு

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division