அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு நொடி’. மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தனஞ்செயன் வழங்குகிறார். எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபாஷங்கர், ரஞ்சனி, குரு சூரியா உட்பட பலர்நடித்துள்ளனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளஇந்தப் படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி மணிவர்மன் கூறியதாவது: ஒரு நொடி என்பதை சாதாரணமாக நினைக்கி றோம். ஆனால், அந்த ஒரு நொடியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்தப் படத்தில் அப்படி ஒரு விஷயம் நடக்கிறது. அது என்ன என்பது கதை. கிரைம் கதை என்றாலும் ஒரு கிரைம் படத்துக்குள் வழக்கமாக இருக்கும் காட்சிகள் இதில் இருக்காது. திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். தமன்குமார் போலீஸ்அதிகாரியாக நடித்திருக்கிறார். சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தில் ஹீரோயின் கிடையாது. இரண்டு மணி நேரம்ஓடும் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ஆச்சரியப்படும்படி இருக்கும். இவ்வாறு மணிவர்மன் கூறினார்.