‘ஆசை ஆசையாய்’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. அவர், அறிமுகமாகி 21 வருடங்களை நிறைவு செய்துள்ளதையடுத்து ‘டெஃப் ஃப்ராக்ஸ் ரெக்கார்ட்ஸ்’ என்ற இசை நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழாவில் ஜீவா பேசும்போது, “இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள், குறும்படங்கள் தயாரிக்க உருவாக்கப்பட்டுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும் மேற்பட்ட புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறோம். ரஜினிகாந்த் சொன்ன கதையின் அடிப்படையில், நமது வேலையை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து இந்நிறுவனத்துக்கு ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ (காதுகேளாத தவளைகள்) என பெயரிட்டுள்ளோம்” என்றார்.
ஆசை ஆசையாய்’ ஜீவாவின் இசை நிறுவனம்
69