அர்ஜூன் தாஸ் – காளிதாஸ் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘போர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை பிஜோய் நம்பியார் இயக்கியுள்ளார். தமிழ், இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இந்திப் பதிப்பில், ஹர்ஷ்வர்தன் ராணே, எஹான் பட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதன் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. “இந்தப் படம் கதை சொல்லலின் எல்லைகளை மாற்றி அமைத்து, வித்தியாசமான, பரபரப்பான அனுபவத்தை தரும் படைப்பாக இருக்கும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்தை குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா அண்ட் கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.