குவான்டம் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஆர்.கே.வித்யாதரன், கே.மஞ்சு இணைந்து தயாரிக்கும் படம், ‘ஸ்கூல்’. இதில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பக்ஸ், சாம்ஸ் ஆகியோருடன் பலர் நடிக்கின்றனர். ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கே. வித்யாதரன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “இது ஸ்கூலில் நடக்கும் கதையைக் கொண்ட உளவியல் த்ரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கிரைம் சம்பவங்களை ஆராயும் விதமாக திரைக்கதை இருக்கும். அதே நேரத்தில் ஆவிகள், பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்தும் தீவிரமாகச் சொல்லவிருக்கிறோம். மாணவர்களை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும் மாணவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், போலீஸ் அதிகாரியாக கே.எஸ். ரவிகுமாரும் நடிக்கின்றனர்” என்றார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.