61
சீனாவின் Danxia Landform Geological Park இல் இருக்கும் இந்த மலைகளுக்குப் பெயர் “Rainbow Mountains”. 24 மில்லியன் ஆண்டுகளாக இருக்கும் இந்த மலைகளுக்கு இப்படி வண்ணம் பூசி அழகு பார்க்கிறது இயற்கை.
பல்லாயிரம் ஆண்டுகளாக ஒன்று சேர்ந்து இருந்த மணற்கற்களும் தாதுப்பொருட்களும், அவ்வப்போது வந்து அரவணைத்த மழையும், எப்போதும் உடனிருந்த காற்றுமே இந்த வண்ணங்களுக்குக் காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.