போத்தல்களால் உருவாக்கப்பட்ட பௌத்த ஆலயம் ஒன்று தாய்லாந்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் Khun Han என்ற இடத்தில் அமைந்திருக்கும் புத்தர் கோயிலின் பெயர் Wat Pa Maha Chedi Kaew. சுருக்கமாகச் சொன்னால் “The Million Beer Bottle Temple”. வெற்று பியர் போத்தல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது தான் இதன் சிறப்பாகும். கிட்டத்தட்ட 1.5 மில்லியன் போத்தல்கள் இந்தக் கோயிலில் பதிக்கப்பட்டுள்ளன.
குப்பையில் வீசப்படும் போத்தல்களைக் கொண்டு இப்படி ஒரு கோயிலைக் கட்டுவதற்காக இக்கோயிலில் இருக்கும் பௌத்த மதத் துறவிகள் 1984ஆம் ஆண்டு முதல் போத்தல்களைச் சேமிக்க ஆரம்பித்துள்ளனர்.
பச்சை கலரில் இருக்கும் பியர் போத்தல்களும், பிரவுன் கலரில் இருக்கும் தாய்லாந்து பியர் போத்தல்களும் அழகழகான வடிவங்களில் இங்கு பதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டடத்தில் இருக்கும் போத்தல்களின் மூடிகளைக் கொண்டு தரையில் விதவிதமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் மக்களிடமும், உள்ளூர் மக்களிடமும் விருப்பமிருந்தால் வெற்று போத்தல்களைச் சேமித்து உதவுமாறு இங்கிருக்கும் பௌத்தத் துறவிகள் கேட்டுள்ளனர்.