‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபஹத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்துக்கு ‘மாரீசன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கியிருந்தார். 2014-ம் ஆண்டு திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘வில்லாலி வீரன்’ படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மாமன்னன்’ படத்துக்குப் பிறகு வடிவேலுவும், ஃபஹத் பாசிலும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்துக்கு ‘மாரீசன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.