Cryovolcano என்றால் Ice Volcano என்று அர்த்தம். இந்த வகை எரிமலைகள் வெடிக்கும்போது வழக்கமாக வரும் எரிமலைக்குழம்போ, பாறைகளோ வெளிவருவதில்லை. மாறாக இவற்றிலிருந்து நீர், அமோனியா, மீத்தேன் போன்றவை வெளிவருகின்றன. பெரும்பாலும் திரவ/திட வடிவிலும், சில சமயங்களில் வாயு வடிவிலும் வெளிவரும் இவற்றின் பெயர் cryomagma (ice-volcanic melt).
இந்த வகை எரிமலைகள் முதன்முதலில் நெப்டியூன் கோளின் நிலா Tritonஇல் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல் ஜுபிட்டர், மிரண்டா, ஜெனிமீடி,டைடேன் Europa(sixth-closest moon of the planet Jupiter), Miranda(the smallest and innermost of Uranus’s five major moons), Ganemede( satellite of Jupiter and the largest moon in the Solar System), Titan(Ice Moon of Saturn) போன்ற நிலவுகளிலும் ஐஸ் எரிமலைகளைக் கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த “ஐஸ்” எரிமலைகள், நிலவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.