மண்பானையில் வைக்கப்படும் நீர் மட்டும் வெயில் காலங்களில் குளிர்ச்சியாக இருப்பதன் காரணமென்ன தெரியுமா?
நவ நாகரிக வளர்ச்சியில், மண்பானை என்பது மறந்தே போய்விட்டது.
அதை மீண்டும் பழக்கத்திற்குக்கொண்டு வந்த பெருமையெல்லாம் பொருளாதார நெருக்கடியில் ஏற்படுத்தப்பட்ட மின் வெட்டையே சாரும்.
பானைகளில் இருக்கும் சிறு சிறு துளைகள் வழியாக உள்ளிருக்கும் நீர் வெளியேறி, வெயில் மிகுதியால் நீராவியாக மாறுகிறது. இந்த நீராவியே, பானைக்குள் இருக்கும் நீரை குளிர்ந்த நீராக மாற்றுகிறது.
குளிர்/மழைக்காலங்களில் வெயில் குறைவாக இருப்பதால், நீர் நீராவியாக மாறுவதில்லை, பானைக்குள் இருக்கும் நீரும் ஜில்லென்று மாறுவதில்லை.
வீட்டிலிருக்கும் மண்பானையின் வெளிபுறத்தில் படிந்திருக்கும் நீர் துளிக்கு இது தான் காரணம்.