இரும்பு இழையை விட பலமான சிலந்தி வலைகளை பின்னும் சிலந்திகள் இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Golden Spider “தங்கச் சிலந்தி” என்ற ஒருவகை சிலந்தியின் இழைகள், அதே தடிமனுள்ள இரும்பு இழையை விட பலமானது. அதேபோல், மடகஸ்காரில் இருக்கும் Darwin Bark Spiders வகை சிலந்திகள் 82 அடி நீள இழைகளை உருவாக்கும் திறன் பெற்றவை.
இவை உருவாக்கும் வலைகள் 30 சதுர அடிகள் வரை இருக்கும்.
சிலந்திகள் தங்கள் வலைகளை ஓரங்களில்தான் முதலில் பின்னத்தொடங்குகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக நடுப்பகுதியை நோக்கி பின்னிக் கொண்டே வந்து முடிக்கின்றனவாம்.
சிலந்திகளின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் நாளங்கள்தான் வலை பின்னத் தேவையான பசை போன்ற இழைகளைத் தருகின்றன என்பது நமக்குத் தெரிந்திருக்கும். புரோட்டீன் நிறைந்திருக்கும் அந்த இழைகள் சிலந்திகளின் வயிற்றிலிருந்து வெளிப்பட்ட உடனே கெட்டியாகி நூல் போல் மாறி விடுகிறதாம்.