Home » போதை

போதை

by Damith Pushpika
January 21, 2024 6:58 am 0 comment

போதையினால்
திசை மாறுவதோ?- தினம்
பாதை தடுமாறிப் போவதுவோ?
வாதைகளை விலை
பேசுவதோ-நிதம்
வார்த்தைச் சகதியைப் பூசுவதோ?

நல்லவ னாகவே நானிலத்தில் – பலர்
நெஞ்சம் நிமிர்த்தியே வாழுவதை
உள்ளத்தி லேற்றிட ஏன் மறந்தாய்?-மது
ஊற்றிலே ஊறிக் குளிப்பதுமேன் ?

வீட்டிலே வம்புகள் சம்பவிக்கும்- மனை
வாழும் குழந்தைகள் நெஞ்சழுத்தும்
கோட்டிலும் ஏறிட
வாய்ப்பளிக்கும்-பெரும்
கேட்டினால் மானத்தின் தூள்பறக்கும்

வேதங்கள் ஓதிடும் போதனைகள்- உனை
வேந்தர் வரிசையில் சேர்த்திடுமே
சாதனை செய்திட வேண்டவில்லை-உந்தன்
சந்ததிக் காதர்ச மாகிடுவாய்.

-திக்குவல்லை கமால்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division