நானும் உங்களைப் போல் உயிருள்ள ஜீவன்தானே
ஆனால் என்னால் நகரத்தான் முடியவில்லை
நான் சிலையாக நிலத்தில் வேரூன்றி நிற்கிறேன்
உலக மக்களுக்கு நான் செய்யும் பணி அதிகம்
உழைத்துக் களைத்த உங்களுக்கு இளைப்பாற
குளிர்ந்த நிழல் தந்து உதவும் நாங்கள் கெட்டவரா
உண்ணப் பழமும் காயும் பூவும் இலையும் மரமும் தருகிறேன்
கொடை வள்ளலாகிய எங்களை அழிப்பது நியாயமா
அது மட்டுமா மற்றொரு இரகசியத்தை சொல்கிறேன்
நாம் வாழும் இந்தப்பூமி இறைவனின் அருட்கொடை
அந்தப்பூமி கதிரவன் கனல்பட்டு காய்ந்துவிடாமல்
செழிப்பாய் இருக்க நாங்கள் தானே உதவுகின்றோம்
நாங்கள் இல்லையென்றால் மண்ணுக்கு மழை கிடையாது
நாமும் உங்கள் மீது பாசம் வைத்துத்தான் வாழுகின்றோம்
நல்ல முறையில் மண்ணை வழம்பெற செய்யுமெங்களை
இரக்கமின்றி வெட்டியழித்து கேட்டைத்தான் தேடுகின்றீர்கள்
அபிவிருத்தி நாகரிகம் என்று காட்டை அழித்து
கண்டபலன் தாங்கொண்ணா வரட்சியின் கொடுமைதானே
அந்த வயதான மரங்களின் பெருமையை நாம் உணரவில்லை
அழிப்பதைவிட்டு புதிதாக பயன்தரு மரங்களை நடுங்கள்
எம்மை எந்தளவு நேசிக்கின்றீர்களோ
அந்தளவுக்கு உங்களையும் நாங்கள் நேசிப்போம்
எங்கும் அழகு பசுமை குளிர்ச்சி எனநாம் தருவோம்
கண்டபடி எம்மை அழிப்பதை உடனே நிறுத்துங்கள்