பிறந்த இந்த புத்தாண்டு
பெரு நன்மைகளை
தரவேண்டும்
பரந்த நல் மனதுடனே
பலரும் திகழ்ந்திட வேண்டும்
சிறந்த நற்காரியங்கள்
சீருடனே செயற்பட வேண்டும் – எம்மை
மறந்து வாழ்ந்து வந்தவர்கள்
மனம் நெகிழ்ந்து
வர வேண்டும்
ஊரும் நாடும் இனி
உருப்பட வேண்டும்
பேரும் புகழும் பெற்று
பெருமை கொள்ள வேண்டும்!
யாரும் எவரும் என்றும்
இனி இனிதே வாழ வேண்டும்!
மாறும் மனிதர்கள் மனம்
மாறியே தேறிட வேண்டும்!
வீடுகள் தோறும் ஒளி தரும்
தீபங்கள் எரிய வேண்டும்
பாடுபட்டு உழைத்த மக்கள்
பரவசப்பட்டு மகிழ வேண்டும்
கேடு கெட்ட பொருளாதாரம்
கெட்டு ஒழிய வேண்டும்
தேடும் நன்மைகள் இனி
நம்மை தேடியே வரவேண்டும்!
புத்தாண்டை வரவேற்போம்
புது நன்மைகளை
தரக் கேட்போம்
–