மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதன் படப்பிடிப்பு வரும் 18-ஆம் திகதி சென்னையில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இணைந்துள்ளார். இதைப் படக்குழு அறிவித்துள்ளது. மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, த்ரிஷா இணைந்து நடித்திருந்தனர்.
‘தக் லைஃப்’ ஐஸ்வர்யா லட்சுமி
71
previous post