அயர்லாந்து நாட்டின் Giant’s Causeway என்ற பகுதியில் கிட்டத்தட்ட 40,000 கருங்கல் தூண்கள் காணப்படுகின்றன. நாற்பதாயிரம் தூண்களும் அச்சில் வார்த்ததுபோல் ஒரே மாதிரி இருப்பதுதான் அதிசயம். அறுங்கோண வடிவில் இருக்கும் இந்தத் தூண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த Bernard Fontanelle என்பவர் பல கணித கணக்கீடுகளுக்குப் பிறகு தேன் கூடு பெரிய அளவில் இருந்தால் எப்படி இருக்குமோ அதே மாதிரி தூண்கள் இருப்பதாகச் சொன்னார்.
இந்தத் தூண்கள் ஒரே மாதிரி இருப்பதன் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் வெடித்த எரிமலையே. எரிமலையின் சக்தியால் கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்திற்கு மேல் நோக்கி நகர்த்தப்பட்ட பாறைகளும், எரிமலைக்குழம்பும் மெதுவாக பூமியின் வெப்பநிலைக்கு மாறத்துவங்கின. அப்போது ஏற்பட்ட வெடிப்புகளே காலப்போக்கில் பாறைகளை ஒரே வடிவமுடைய தூண்களாக மாற்றியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.