1001 வகையான சீஸ்களை கொண்டு பீட்சாவை உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் பிரான்ஸை சேர்ந்த சமையல் நிபுணர்களான பெனாய்ட் மற்றும் மாண்டெலானிக்கோ.
நம்மில் பலர் ஏதோ ஒரு வகையில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகளை படைத்து வருகின்றனர்.
உடற்பயிற்சியில், ஓவியம் வரைதல், நடனமாடுதல், உணவு சமைத்தல் என ஒவ்வொரு விடயங்களிலும் தினம் தினம் பலர் சாதித்துக் கொண்டிருகின்றனர். அந்த வகையில் 1001 வகையான சீஸ்களை கொண்டு பீட்சாவை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் பிரான்ஸை சேர்ந்த சமையல் நிபுணர்களான பெனாய்ட் மற்றும் மாண்டெலானிக்கோ. இந்த பீட்சாவில் 940 வகையான ஃப்ரென்ச் சீஸ்களும் 61 வகையான மற்ற நாட்டு சீஸ்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.