தண்ணீருக்கு மேல் அமைந்த ஆச்சரியமூட்டும் மேம் பாலங்களில் பயணம் செய்வது சாகசத்தை கொடுக்கும் அளவிற்கு இருக்கும். அந்த வகையில் நம்மை பிரமிக்க வைக்கும் சிறப்பான 5 மேம்பாலங்கள் உலகில் உள்ளன.
ஷிசிகுவான் மிதக்கும் பாலம் – சீனா
சீனாவின் தென்மேற்கு ஹூபே மாகாணத்தின் சுவான் பகுதியில் அமைந்துள்ளது இந்த 1640 அடி நீளம் கொண்ட பாண்டூன் பாலம்.
ேநார்ட் ஹோர்ட்லேண்ட் பாலம் – நோர்வே
சுமார் 5,295 அடி நீளம் கொண்ட இந்த பாலம் நோர்வேயின் வெஸ்ட்லேண்ட் கவுண்டியில் உள்ள கிளாவனசெட் (Klauvaneset) மற்றும் பிளாட்டே தீவுக்கு இடையே அமைந்துள்ளது.
ஹோமர் எம்.ஹாட்லி மெமோரியல் பாலம் – வாஷிங்டன்
இந்த மிதக்கும் பாலம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட்டிலில் அமைந்துள்ளது. இது 5,811 அடி நீளம் கொண்ட உலகின் ஐந்தாவது நீளமான மிதக்கும் பாலமாகும்.
வில்லியம் ஆர். பென்னட் பாலம் – கனடா
மொத்தம் 1,060 மீற்றர் நீளம் கொண்ட இந்த மிதக்கும் பாலம் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா மற்றும் வெஸ்ட்பேங்கை இணைக்கும் ஒகனகன் ஏரியின் குறுக்கே அமைந்துள்ளது.
பேப்பூர் மெரினா கடற்கரை மிதக்கும் பாலம் – கோழிக்கோடு
இந்த மிதக்கும் பாலம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமைந்துள்ளது. இப் பாலம் 100 மீற்றர் நீளமும் 3 மீற்றர் அகலமும் கொண்டது.