நடிகை ராஷ்மிகா மந்தனா இப்போது அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அதில் கலந்துகொண்ட ராஷ்மிகா, பாதியில் வெளியேறியதாக தெலுங்கு சினிமா உலகில் செய்திகள் வெளியாயின.
ரன்பீர் சிங், ராஷ்மிகா, அனில் கபூர் நடித்து ஹிட்டான இந்திப் படம் அனிமல். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் சாதனைப் படைத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா மும்பையில் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக, நடிகை ராஷ்மிகா, ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறியதாக கூறப்பட்டது.
ஆனால், ராஷ்மிகா தரப்பு இதை மறுத்துள்ளது. “இயக்குநரிடம் அனுமதி பெற்ற பிறகே அவர் ‘அனிமல்’ வெற்றி விழாவில் கலந்துகொண்டார். அவர் பாதியில் வெளியேறியதாகச் சொல்வதில் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளனர்.