பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு தீவுக்குப் பெயர் Ilha da Queimada Grande. ஆங்கிலத்தில் Snake Island. இந்தத் தீவில் மனிதர்கள் வாழ தடைவிதிக்கப்பட்டுள்ளது. காரணம் இங்கிருக்கும் பாம்புகள் தான். உலகிலேயே கொடிய விஷமுடைய பாம்புகளில் ஒன்றான Golden Lancehead Pit-viper ஒரு சதுர மீற்றருக்கு ஒரு பாம்பு என்ற கணக்கில் இந்தத் தீவில் அதிகமாக உள்ளன.
இந்த வகைப் பாம்புகளில் இருக்கும் விஷத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே விஷமுடைய fer-de-lance வகைப் பாம்புகள் தான் தென் அமெரிக்காவில் பாம்புகளால் நிகழும் 80% மரணங்களுக்குக் காரணமானவை என்றால், Golden Lancehead Pit-viper பாம்புகளின் விஷம் எப்படியிருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள். இந்த Golden Lancehead Pit-viper பாம்புகளைத் தவிர, இத்தீவில் வேறெந்தவகைப் பாம்புகளும் இல்லை.
பிரேசில் அரசு, இங்கு வாழை மரங்களைப் பயிரிடவும் மக்களைக் குடியமர்த்தவும் செய்துவந்த முயற்சிகள் அனைத்தும் இப்பாம்புகளால் தடைபட்டு நிற்கின்றன.
இதையும் தாண்டி, இந்தத் தீவை பார்வையிட விரும்பினால், பிரேசிலின் கடற்படையினர் தீவுக்கு 100 மீற்றர் தொலைவில் இறக்கிவிடுவார்கள். அங்கிருந்து படகிலோ அல்லது நீந்தியோ இத் தீவுக்குச் சென்றுவரலாம்!