மேற்கு மற்றும் மத்திய வட அமெரிக்கக் காடுகளில் காணப்படும் பறவை பூர்வில். இது விசித்திரமாக பனிக்காலத்தில் தூங்கி வழியும் பறவை. இரவில் பறக்கும் பூச்சிகளை உண்டு வாழும் இதன் பழக்க வழக்கங்கள் இதுவரை அறியப்படவில்லை. இந்த பூர்வில் பறவை ‘இப்’ என்னும் சத்தத்துடன் பாடலைப் பாடிக்கொண்டே பறக்கும். இதை அமெரிக்கப் பழங்குடியினர் ‘தூங்கும் பறவை’ என்றே அழைத்தனர்.
முதன் முதலில் பூர்வில் பறவையை தூங்கிய நிலையில் கண்ட விஞ்ஞானிகள் இறந்தவிட்டது என்றே நினைத்தனர். காரணம் இதன் கண்கள் மூடிய நிலையில் உடம்பு சில்லிட்டிருந்தது. அந்தப் பறவையைத் தொட்டபோது கண்விழித்து பறந்துவிட்டது. இந்தப் பறவையை பரிசோதனை செய்ததில் பூர்வில் பறவை மாதக் கணக்கில் தூங்கும் போது உடலில் உஷ்ணம் குறைந்து விடுகிறது. அப்போது இதன் உடம்பில் 7 கிராம் அளவு தான் கொழுப்புச் சத்து இருக்கும். இந்தக் கொழுப்பு 70 முதல் 100 நாட்கள் வரை இப்பறவை உணவில்லாமல் உயிர் வாழ உதவி செய்கிறது.