பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானியாவின் இளவரசி Anne உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது,இளவரசி Anne, அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமதி லோரன்ஸ் மற்றும் அரச தூதுக்குழு மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேதகு அன்ட்ரூ பேட்ரிக் ஆகியோர், கட்டுநாயக்கவில் உள்ள MAS ACTIVE தயாரிப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் MAS Nirmaanaவிற்கு விஜயம் செய்தனர். அங்கு அவருக்கு மிகுந்த வரவேற்பு வழங்கப்பட்டது. MAS Holdings இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளர் மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வேலை வழங்கும் நிறுவனமாகும்.
MAS Nirmaanaவில் அவர்கள் நிறுவனத்தின் ஆடை நிபுணத்துவம் மற்றும் கண்டுபிடிப்பு திறன்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றனர். MAS Holdings குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ மற்றும் MAS Active இன் பிரதம நிறைவேற்று அதிகாரி முடித பெர்டினாண்டோ ஆகியோர் இந்த கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்கு இராஜரீகமான பிரதிநிதிகளுடன் ஒன்றிணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.