டெங்கு நோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் விபரங்களை அறிந்துகொள்ளும் நோக்குடன் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு பிரிவில் நேற்று (06) முதல் நிறுவப்பட்டுள்ள 011-7 966 366 என்ற தொலைபேசி இலக்கத்துடன் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்கள் உட்பட காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை டெங்கு நோய் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை பற்றிய விபரங்களையும் தெரியப்படுத்தலாமென்றும் அவர் அறிவித்துள்ளார்.