தெற்காசியாவில் புகழ்பெற்ற இணைய-வணிகத் தளமான (e-commerce platform) Daraz Sri Lanka வுடன் தனது வணிக ரீதியிலான இணைவை (business partnership) அறிவிப்பதில் Roar AdX மகிழ்ச்சி அடைகிறது. Daraz Marketing Solutions (DMS) ற்கான பிரத்தியேக மறுவிற்பனையாளர் (exclusive reseller) என்ற வகையில், Roar AdX இலங்கையிலுள்ள வர்த்தகர்களுக்கு Daraz தளத்தில் வழங்கப்படும் விளம்பரக் கருவிகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றது.
Daraz இல் விளம்பரப்படுத்த ஆர்வமுள்ளவர்களுக்கான வாய்ப்பு, பயிற்சி மற்றும் உயர்திறன் வணிகங்களுக்கான (upskill businesses) நிபுணத்துவத்தையும் Roar AdX இவ்வணிகக் கூட்டிணைவினூடாக வழங்குகின்றது. மேலும், பயன்மிக்க விளம்பரப் பிரச்சாரங்களை உருவாக்குவதற்கும் இயக்குவதற்கும் உதவவுள்ளது.
அத்தோடு, வணிகங்களை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் உதவி, பிரத்தியேக காணொளிக் கருத்தரங்கு (WEBINAR) மற்றும் கற்றல் வளங்களை மூன்று மொழிகளிலும் Roar AdX வழங்குகிறது.
“தங்களது தளத்தில் வணிகம் (business) செய்பவர்களுக்கு அவர்களின் தயாரிப்புகளை அதிக பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்துவதற்கான இணையற்ற ஒரு வாய்ப்பை Daraz வழங்குகிறது.
மேலும் இவ்வணிகக் கூட்டிணைவு, வியாபாரங்கள் சரியான தெரிவுநிலையைப் பெறுவதையும் (right visibility), இணையத்தில் கொள்வனவு (online purchase) செய்யும் வாடிக்கையாளர்கள் அதனை சிறப்பான முறையில் உபயோகித்து தங்களை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.