மாற்றமுறும் உலகுக்கு ஏற்ப மாசற்ற ஊடக கலாசாரத்துடன் கடந்த 90 வருட காலமாக வாசகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து வரும் பத்திரிகை தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை. கலைஞர்களை ஊக்கப்படுத்த கலைஞர்களின் பேட்டிகளையும் கலைஞர்கள் தொடர்பான செய்திகளையும் பிரசுரித்து வரும் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை, வரலாற்றில் முதற்தடவையாக அரச நாடக விழாவொன்றுக்கு ஊடக அனுசரணை வழங்கி கலைஞர்களையும் அதனை நடத்திய டவர் மண்டப அரங்க மன்றத்தையும் கல்வி அமைச்சையும் உற்சாகப்படுத்தி கடந்த 2023.12.28ஆம் திகதி கொழும்பு 10, மருதானை, எல்பின்ஸ்ட்டன் மண்டபத்தில் நடைபெற்ற டவர் மண்டப நாடக விழாவுக்கு ஊடக அனுசரணை வழங்கியது. இவ்விழாவில் வெற்றிக் கொடி கட்டிய கலைஞர்களுக்கு ஜூரி விருதுகளை வழங்க சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தினது பணிப்பாளரும் மன்னார், பேசாலை சங்கவி தியேட்டர் உரிமையாளருமான துரைராசா சுரேஸை, அனுசரணையாளராக்கிய பெருமையும் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளையே சாரும்.
அதுமட்டுமன்றி, திருமதி இளங்கோவன் செல்வராணியை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் வத்தளை கலைத்தென்றல் நாட்டியக் கலா நிலைய மாணவிகளின் நடனத்தை இவ்விழாவில் மேடையேற்ற சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்துடன் உறுதுணையாக இருந்ததும் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையே.