52
வசனங்களைப் பிரித்து அவளைத்
துண்டு துண்டாக்கியது மில்லை
பல்வகை இதழ்களிலிருந்து அவளைப்
பக்குவமாய்ப் பிரித்தெடுக்கவுமில்லை
பழைய புதிய நூல்களைத்
தேடித்தேடி பிரதிபண்ணியது மில்லை
வேற்று மொழிகள் பலவற்றிலிருந்து
மொழி பெயர்க்கவுமில்லை
இணைய வலைத் தளங்களிலிருந்து
இரவல் வாங்கவுமில்லை
அவள் என் உருவாக்கத்தில்
உற்பத்தியான உயிருக்கு உயிரானவள்
எனக்கு மட்டுமே சொந்தமான
அவளென் அழகிய கவிதை.