56
நடிகர் விஜய், லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68-வது படமான இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அடுத்து துருக்கியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.