தமிழில், சசியின் ‘பூ’ படத்தில் அறிமுகம் ஆனவர் மலையாள நடிகை பார்வதி. தொடர்ந்து, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இப்போது பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்து தூதா, கடக் சிங் ஆகிய வெப் தொடர்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் அடுத்து துல்கர் சல்மான் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இதை அவர் மறுத்துள்ளார்.
“நான் எந்த சூப்பர் ஹீரோ படத்திலும் நடிக்கவில்லை. தவறானத் தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.