மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். மன்சூர் தயாரிக்கும் படம், ‘சிரோ’. ஃபேன்டஸி கதையை கொண்ட இதில், ‘பதினெட்டாம் படி’, ‘வாலாட்டி’ ஆகிய மலையாளப் படங்களில் நடித்த அக் ஷய் ராதாகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார்.
கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சாப்ரியா, கதாநாயகியாக நடிக்கிறார். ரோகினி, ‘போர் தோழில்’ லிஷா சின்னு, நோபல் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். விவேக் ராஜாராம் இயக்குகிறார். அஸ்வின் ஆர்யன் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் கூறும்போது, “‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. 45 நாட்களில் படத்தை முடித்துள்ளோம். தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
பெப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.