கோடை காலமும் ஆரம்பித்து விட்டது. இனி ஐஸ்கிரீம்களுக்கு பஞ்சம் இருக்காது. ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இரசித்து சாப்பிடக் கூடிய ஒன்று தான் இந்த ஐஸ்கிரீம். இந்த ஐஸ்கிரீம்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் சாதாரண மக்களுக்கு பழக்கப்பட்டுப் போனது தான் குச்சி ஐஸ்கிரீம். அந்த குச்சி ஐஸை கண்டுபிடித்ததும் ஒரு சிறுவன் தான்.
1905ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில் வசித்த Frank Epperson என்ற 11 வயது சிறுவன் தான் அந்த விஞ்ஞானி. ஒரு குளிர்கால மாலை நேரத்தில், Frank தன் வீட்டுக்கு வெளியில் ஜூஸ் டம்ளரை மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிட, மறுநாள் காலையில் மொத்த ஜூஸும் ஐசாக மாறியிருந்தது. இது நடந்து 17 வருடங்களுக்குப் பிறகு Frank, தான் எதிர்பாராத விதமாக கண்டுபிடித்த குச்சி ஐஸை நண்பர்களுக்குச் செய்துதர, இது மிக பிரபலமாகிபோய் விட்டது. 1924ஆம் ஆண்டு குச்சி ஐஸை கண்டுபிடித்ததற்கான உரிமையைப் பெற்ற Frank, அதற்குப்பின் குச்சிஐஸ் செய்யும் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து புகழ்பெற்றார்.