Home » ‘மலையகம் 200’ நினைவு அஞ்சல் முத்திரை புதுடில்லியில் வெளியீடு
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு கௌரவம்

‘மலையகம் 200’ நினைவு அஞ்சல் முத்திரை புதுடில்லியில் வெளியீடு

முதலாவது முத்திரை இ.தொ.கா. தலைவர் செந்திலிடம் கையளிப்பு

by Damith Pushpika
December 31, 2023 7:20 am 0 comment

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவர்களின் “உழைப்பை” அங்கீகரிக்கும் வகையிலும் அவர்களை கௌரவிக்கும் வகையிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலில் நினைவு அஞ்சல் முத்திரை நேற்று புதுடில்லியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டு வைத்தார்.

முதலாவது நினைவு அஞ்சல் முத்திரையை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் அந்த நிகழ்வின்போது பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவி அனுசியா சிவராஜா, பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தாவிசாளர் இராஜதுரை, தேசிய அமைப்பாளர் சக்திவேல், சிரேஷ்ட ஆலோசகர் மதியுகராஜா, இ.தொ.காவின் உப தலைவர்களான சிவஞானம், பிலிப்குமார், அசோக்குமார், பாஸ்கர், பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து உட்பட இ.தொ.காவின் பல முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division