மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவர்களின் “உழைப்பை” அங்கீகரிக்கும் வகையிலும் அவர்களை கௌரவிக்கும் வகையிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலில் நினைவு அஞ்சல் முத்திரை நேற்று புதுடில்லியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டு வைத்தார்.
முதலாவது நினைவு அஞ்சல் முத்திரையை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமான் அந்த நிகழ்வின்போது பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவி அனுசியா சிவராஜா, பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தாவிசாளர் இராஜதுரை, தேசிய அமைப்பாளர் சக்திவேல், சிரேஷ்ட ஆலோசகர் மதியுகராஜா, இ.தொ.காவின் உப தலைவர்களான சிவஞானம், பிலிப்குமார், அசோக்குமார், பாஸ்கர், பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து உட்பட இ.தொ.காவின் பல முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.