புத்தாண்டே வருக
புத்தாண்டுப் புதுமலர்
மலர்ந்தது
எங்கும் அதன் மணம்
கமழ்கிறது
சந்தோஷம் எங்கும்
பிறக்கிறது
மக்கள் மனம் எல்லாம்
மகிழ்கிறது
வாணவெடி ஓசை
எங்கும் ஒலிக்க
கோயில் எங்கும்
பூஜை விளங்க
தேசிய கொடிகள்
எங்கும் பறக்க
ஆலய மணி ஒலி
எங்கும் கேட்க
பிறந்ததே புத்தாண்டு
நீ வருக! நீ வருக!
உள்ளத்தின் சோகங்கள் அகன்றிட
சாந்தி சமாதானம் ஓங்கிட
கொடூரம் மறைந்து
சுபீட்சம் பிறந்திட
வாழ்வின் ஏற்றங்கள் கண்டிட
மலரட்டும் புத்தாண்டு
போட்டி பொறாமை அகன்றிட
சாந்தி சமாதானம் ஓங்கிட
சண்டை குழப்பம் விலகிட
இருள் அகன்று ஒளிவீசிட
அஞ்ஞானம் மறைந்து
மெஞ்ஞானம் பெருகிட
மலரட்டும் புத்தாண்டு
கழிந்த காலங்கள்
நாம் கண்ட
கசப்பான நிகழ்வுகள்
இனியும் வேண்டாம்
ஆட்சி அதிகார
குழப்பங்கள்
டெங்கு, கொரோனாவின்
கொடுமைகள்
இனியும் வேண்டாம்
வளம் பல பெருகிட
தேகசுகம் உடல்நலம்
என்றும் கிடைத்திட
மலரட்டும் புத்தாண்டு
புத்தாண்டே
உன்னை வரவேற்றோம்
நீ வருக! வருக!